தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை… ஆனால் எல்லா தந்தையும் இவ்வாறு இருப்பதில்லை என்பதற்கு இச்சம்பவம் தக்க எடுத்துக்காட்டாகும்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பூரிகாமணிமிட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம்… எப்பொழுதும் குடி குடி என்று குடிக்கு அடையாகி இவர் இருட்டாகிவிட்டாலே போதும் போதையில் தான் வீட்டிற்கு வருவராம்.
போதையில் வரும் இவர் அதிகாலை வரை தூங்காமல் வீட்டில் தனது மனைவியிடம் சண்டை போடுவதையே வழக்கமாக வைத்துள்ளார். குடும்பத்தார் சமாதானப்படுத்திவிட்டு அதிகாலை தான் தூங்கச் செல்கின்றனர்.
இதையே வழக்கமாக கொண்டிருந்த இவர் கடந்த வாரமும் இவ்வாறு நடந்துள்ளது. பொறுமையின் உச்சம் வரை சென்றும் பன்னீர் செல்வம் திருந்தாததால், ஆத்திரமடைந்த மகன் பீர் போத்தலை எடுத்து மண்டையைப் பிளந்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த பன்னீர் செல்வம் சம்ப இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரை வேறு யாரோ கொலை செய்துவிட்டதாக கூறி நாடகமாட முயன்ற மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.