உலகெங்கிலும் சிட்டுக் குருவிகள், பலவித பறவை இனங்கள் அழிந்து வருகிறது.
குருவி கூடுகளை அழிப்பது இயற்கையை எதிர்க்கும் செயல் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
இப்படி ஒரு புறம் இருக்க இயற்கையை போற்றும் வகையில் வீட்டில் குருவிகள், பறவைகள், பட்டாம்பூச்சிகள் என அதனுடன் வாழ்ந்து வருகிறார் அருந்ததி மஹத்ரி என்னும் பெண்.
இந்தியாவின் மும்பை மாநிலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அருந்ததி வசித்து வருகிறார்.
ஐடி துறையில் வேலை பார்த்து வரும் அருந்ததியின் வீட்டில் பறவைகளுக்கு தங்கும் இடம் உருவாக்கியுள்ளார்.
இவர் வீட்டு பால்கனியில் 350 பட்டாம்பூச்சிகளும் உள்ளன. இவர் வீட்டில் வளரும் சிட்டுக் குருவி, பல விதமான பறவைகள், பட்டாம்பூச்சிகளுக்கு அருந்ததி தண்ணீர் மற்றும் உணவு கொடுத்து வருகிறார்.
அருந்ததி இயற்கை வளங்கள் மற்றும் இயற்கை பாதுகாப்பு மேலாண்மை சம்பந்தமான படிப்பையும் முடித்துள்ளார்.
இதுகுறித்து அருந்ததி கூறுகையில், நகரத்தில் வாழ்பவர்கள் இயற்கையுடனான தொடர்பை விட்டு விலகி வருகிறார்கள்.
நான் இயற்கையுடன் இணையவே கடந்த 4 ஆண்டுகளாக இப்படி பல விதமான பறவைகள், பட்டாம்பூச்சிகளை பராமரித்து வருகிறேன்.
என்தோழி எனக்கு முதல் முதலில் ஒரு பறவையை பரிசாக அளித்தார். அதிலிருந்து தான் இது எல்லாமே ஆரம்பமானது என அருந்ததி கூறியுள்ளார்.
மேலும், சிட்டுக் குருவி, பறவைகள் கூட்டுகளை அழிக்காமலிருப்பதே இயற்கைக்கு நாம் செய்யும் நலன் என அவர் தெரிவித்துள்ளார்.
அருந்ததி வளர்க்கும் பறவைகளுக்கான கூடுகள் களிமண், தேங்காய் மூடி மற்றும் மூங்கிலால் செய்யப்பட்டுள்ளன.
அருந்ததியின் இந்த செயலுக்கு அவர் கணவரும், நண்பர்களும் உதவியாக இருக்கின்றனர்.