Loading...
நாட்டின் அனர்த்த நிலைமைகளின் போது உயிரிழப்புக்களைக் குறைப்பதற்கு பிரதான காரணமாக இருந்தவை இலத்திரனியல் ஊடகங்களே என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் மக்களுக்குத் தேவையான செய்திகளை வழங்கி மக்களுக்கு ஏற்பட இருந்த பாதிப்புக்களைக் குறைக்கும் பாரிய பங்களிப்பை ஊடகங்கள் முன்னெடுத்துள்ளதுடன், பல உதவித்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றன.
Loading...
அத்துடன், அரசாங்கத்தின் தகவல்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் நடவடிக்கையை களத்தில் இருந்தவாறே அவை செய்து வருகின்ற நிலையில், இவை பற்றி புரிந்துகொள்ளாத சில அரசியல்வாதிகள் தேவையற்ற கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் என அமைச்சர் மேலும் கூறினார்.
Loading...