தமிழகத்தின் சென்னையில் விளம்பர படங்களில் நடித்து வந்தவர் கானம் நாயர், இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.
கடந்த 26-ஆம் திகதி தனது கருப்பு நிற ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து கீழ்ப்பாக்கத்திற்கு சென்று கொண்டிருந்த போது திடீரென காணாமல் போய்விட்டார்.
இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரணை நடத்திய பொலிசார், அவரின் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அனைத்திலும் சோதனை மேற்கொண்டனர், ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
அதன் பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவையும் சோதனை செய்தனர். அதிலும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இதனிடையே கானம் நாயர் வழக்கமாக தான் அலுவலகம் செல்லும் பாதையில் போகாமல் காணாமல் போன தினத்தன்று வேறு பாதையில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
காணாமல் போய் 3 நாட்கள் ஆன நிலையில் அவர் பற்றி எந்தத் தகவலும் கிடைக்காததால் அவரை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து திடீரென்று பொலிசாரை தொடர்பு கொண்ட கானம் நாயர் தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறியுள்ளார்.
அதன் பின்னர் பிற்பகலில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த அவர் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கானம் கபூர் மாயமாகி நான்கு நாட்கள் ஆன நிலையில் திடீரென்று போன் செய்து தான் பத்திரமாக இருக்கிறேன் என்றும் அதைத் தொடர்ந்து வீடும் திரும்பியுள்ளார்.
இந்த சம்பவம் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதால், அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.