தனது வாழ்க்கையில் எந்தவிதமான போராட்டமும், துன்பமும் இல்லாமல் வாழ்வதற்கு யாருக்குதான் ஆசை இருக்காது.
ஆனால் சிலர் இது போன்ற வாழ்க்கையை அனுபவித்தாலும், பலபேர்கள் இந்த ஆசையை வெறும் கனவாகவே வைத்திருப்பார்கள்.
எனவே நமது வாழ்வில் தனக்கென்ற பெயர், செல்வம், புகழ் போன்ற அனைத்தும் மேம்படுவதற்கு, தொடர்ந்து திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மறக்காமல் இதை செய்யுங்கள்!
ஞாயிற்றுக்கிழமை
ஞாயிற்றுகிழமையன்று ஒருவர் வெற்றிலை வாயில் போட்டாலோ அல்லது வெளியே செல்லும் போது ஒரு வெற்றிலையை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்வதோ மிகவும் நல்லது.
இப்படி ஒருவர் ஞாயிற்றுகிழமையன்று செய்தால், அன்று நாம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் நமக்கு சாதகமாக அமையும்.
திங்கள் கிழமை
திங்கள் கிழமை எப்போதும் சிறப்பாக இருக்க வேண்டுமெனில் நமது வீட்டின் நுழைவாயிலைப் பார்த்தவாறு ஒரு நீள்வட்ட வடிவில் இருக்கும் கண்ணாடியை வைக்க வேண்டும்.
பின் நாம் வெளியே செல்லும் போது, அந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்துவிட்டு செல்ல வேண்டும்.
செவ்வாய் கிழமை
இந்து மதத்தில் செவ்வாய் கிழமையானது அனுமனுக்கு உகந்த நாளாக அர்பணிக்கப்படுகிறது.
எனவே செவ்வாய் கிழமை மட்டும் அனுமன் மந்திரங்களை காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு முன் சொல்ல வேண்டும்.
மேலும் இந்நாளில் வெளியே செல்லும் முன், வாயில் சர்க்கரை அல்லது வெல்லம் சிறிதை சாப்பிட்டு சென்றால் அன்று முழுவதும் நமக்கு நன்மையாகவே நடக்கும்.
புதன்கிழமை
மன ரீதியாக புதன்கிழமைகள் அன்று முக்கியமான வேலையைச் செய்வதற்கு முன், சிறிது புதினா, கொத்தமல்லி போன்றவற்றை மறக்காமல் சாப்பிட வேண்டும். இதனால் அன்று முழுவதும் ஒரு நல்ல மாற்றம் நமக்கு கிடைக்கும்.
வியாழன் கிழமை
வியாழக்கிழமை உள்ள நாட்களில் நாம் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன், நமது வாயில் சிறிது சீரகம் அல்லது கடுகை போட்டு மெல்ல வேண்டும். ஆனால் அதை விழுங்க வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை.
வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமை நாட்களில், நாம் எந்த ஒரு முக்கிய பணியை தொடரும் முன்பு சிறிதளவு தயிரை சாப்பிட வேண்டும். இதனால் அன்று நாம் நினைக்கும் அனைத்தும் செயல்களுமே வெற்றிகரமாக நடக்கும்.
சனிக்கிழமை
சனிக்கிழமை நாட்களில் இஞ்சியில் ஒரு துண்டை நறுக்கி, அதை நெய்யில் நனைத்து சாப்பிட்டு வந்தால், அன்று முழுவதும் நம்மை தேடி அதிர்ஷ்டம் வருவதால், நமக்கு நன்மையே நடக்கும்.