தேர்தல் ஆணையகத்திற்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட டி.டி.வி.தினகரனின் பிணை மனு மீதான தீர்ப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு 50 கோடி ரூபா இலஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டு, இம்மாதம் முதலாம் திகதி முதல் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பிணை கோரி தினகரன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது பிணை மனு கோரிக்கை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையிலேயே நாளை தீர்ப்பு வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி வழக்கு நேற்றும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது டெல்லி பொலிஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தினகரனால் தேர்தல் நடைமுறையின் புனிதத்துவம் மாசுபடுத்தப்பட்டுள்ளது. எனவே தினகரனின் பிணை மனுக்களை கடுமையாக எதிர்ப்பதாக வாதிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.