காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தனியே அரசாங்கத்தினால் மட்டும் காணாமல்ஆக்கப்படவில்லை. புலிகள் மற்றும் ஆயுத குழுக்கள், இந்திய அமைதிப்படைபோன்றவற்றினாலும் காணாமல் ஆக்கப்பட்டார் கள். இந்நிலையில் அரசாங்கத்திடம்மட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? என கேட்பதில் நியாயம் இல்லை. எனவடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே கூறியுள்ளார்.
இன்றைய தினம் மாலை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலு ம் அவர் குறிப்பிடுகையில்,
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பரணகம ஆணைக்குழு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுஆகியன விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
அவர்களுடைய விசாரணைகளின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் தங்கள் பிள்ளைகளை படையினர் கடத்தியதாகவும்,புலிகள் கடத்தியதாகவும், வேறு ஆயுத குழுக்கள் கடத்தியதாகவும், இந்திய அமைதிப்படை கடத்தியதாகவும் கூறியுள்ளார்கள்.
இந்நிலையில் புலிகளின் தலைவர்கள் மற்றயஇயக்கங்களின் தலைவர்கள் என எவரும் உயிருடன் இல்லை. இந்நிலையில் எல்லோரும்அரசாங்கத்தை மட்டும் கேட்கிறார்கள். அது நியாயமற்றது.
இந்த அரசாங்கம் கடந்தகாலஅரசாங்கங்களை போல் இளை ஞர்களை மறைத்து வைத்துக் கொண்டு பொய்களை சொல்லித் திரிவதில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கவே மத்திய அரசாங்கம் நினைக்கிறது.
இதன் ஒரு கட்டமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் ஒன்று வழங்கப்படவுள்ளது. அதன்ஊடாக அவர்களுடைய சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவுள்ளது.
இதற்காக ஜனாதிபதிகுழு ஒன்றை உருவாக்கவும் அந்த குழு ஊடாக பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை அறியவும்தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள்தென்னிலங்கையிலும் நடைபெற்றிருந்தது. ஆனால் என்ன செய்வது?
மேலும் காணாமல்ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என அவர்களுடைய உறவினர்கள்நம்புகிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் அவர் கள் எங்கே இருக்கிறார்கள் என்பதுஅவர்களுக்கு தெரியாது. இதே நிலையிலேயேஅரசாங்கமும் இருக்கின்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதுஎவருக்கும் தெரியவில்லை. எவரும் இல்லை. மேலும் அரசாங்கத்திடம் மட்டும் எங்கள்பிள்ளைகள் எங்கே என மக்கள் கேட்கிறார்கள். அது நியாயமில்லை.
இன்றைக்கு பிரபாகரன் இல்லை, சூசை இல்லை இந்நிலையில் எவரிடம் சென்று கேட்பது. இதே பதிலையேஜனாதிபதியும்சொல்வார். இதனையே சொல்லவும் இயலும்.
நாவற்குழி விகாரை தொடர்பாக…
யாழ்.நாவற்குழி பகுதியில் பௌத்த தாது கோபுரம் ஒன்றை நிறுவுவதற்கான பிரதேச சபையின்அனுமதி பெறப்படவில்லையானால் அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம். எனகூறியிருக்கும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே,
இலங்கையில் உள்ள சகல மக்களுக்கும்சட்டம் ஒன்றே எனவும், யாழ்ப்பாணம் இலங்கைக்கு வெளியே இல்லை. இலங்கைக்குள்ளேயே யாழ்ப்பாணம் உள்ளது. ஆக வே இலங்கையில் சட்டம் அனைவருக்கும் சமமானது. எனவே மேற்படி தாது கோபுரம் நிறுவுவதற்குஅனுமதி பெ றப்படவில்லை என்றால் எவரும் நீதிமன்றம் செல்லலாம் எனவும், தெற்கில்யாரும் விரும்பியபடி விகாரைகளையோ, கோவில்களையோ, பள்ளிவாசல்களையோ அமைக்கலாம் அங்கே எந்த தடைகளும் இல்லை எனவும் கூறினார்.
இதேவேளை தாது கோபுரம் நிறுவுவதற்கு அனுமதி பெற வேண்டுமா என்பது தொடர்பாக தான்ஆராய வேண்டும் எனவும் கூறினார்.
தொடர்ந்து தென்னிலங்கையிலிருந்து அதிகளவில் இனவாதகருத்துக்கள் வெளியாகின்றமை தொடர்பாக கேட்ட போது தென்னிலங்கையில் ஞானசார தேரர் என்றால் வடக்கில் சிவாஜிலிங்கம்இருக்கிறார். இவர்கள் இருவரும் சொல்ல முடியாதவற்றையும், செய்ய முடியாதவற்றையும்பேசுகிறார்கள்.
தென்னிலங்கை அனர்த்தத்திற்கு உதவி கோரல் தொடர்பாக..
இலங்கையின் தென்பகுதியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குயாழ்ப்பாண மக்கள் உதவிகளை வழங்குங்கள். என கேட்டிருக்கும் வடமாகாண ஆளுநர்ரெஜினோல்ட் கூரே யாழ்ப்பாண மக்களின் உதவிகள் தென்னிலங்கை மக்களுக்கு வடக்குமக்கள் கொடுக்கும் நல்லிணக்க செய்தியாக அது அமையும்.
மனிதர்களுக்கும் மனிதர்களுக்குமிடையில் முரண்பாடுகள் உள்ளது. அதேபோல் மனிதர்களுக்கும்இயற்கைக்குமிடையில் முரண்பாடுகள், உள்ளது. அந்தவகையில் இயற்கை அனர்த்தத்தினால்தென்னிலங்கையில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் யாழ்ப்பாணமக்களும் ஒட்டு மொத்தமாக வடமாகாண மக்களும் தங்கள் பூரணமான உதவிகளை வழங்க வேண்டும். சுனாமி அனர்த்தம் உருவான போதுஇனம், மதம், சாதி என எ ந்த பேதமும் இல்லாமல் சகல மக்களும் ஒன்றிணைந்துசேவையாற்றினர்.
அவ்வாறே இப்போதும் உதவிகளை வழங்க வேண்டும். யாழ்ப்பாண மக்கள்,வடக்கு மக்கள் வழங்குகின்ற உதவிகள் தென்னிலங்கைக்கு வடக்கு மக்கள் கொடுக்கும் நல்லிணக்கத்திற்கான செய்தியாக எடுத்துசெல்லப்படும்.
யாழ்ப்பாண மக்கள் எனக்கு தெரிந்தளவில் மனிதத் தன்மை உள்ளவர்கள்.அதனால் அவ ர்கள் இப்போதே பல உதவிகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாகசில அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இப்போதே உதவிகளை திரட்டி வருகின்றார்கள்.
அதேபோல் எங்களுடைய பொருட்கள்சேகரிப்பிலும் மக்கள் தாராளமாக உதவிகளை வழங்க வேண்டும். நான் மீண்டும் சொல்கிறேன்வடக்கு மக்களின் உதவிகள் நல்லிணக்கத்திற்கான செய்தியாக தெற்கிற்கு எடுத்துசெல்லப்படும் என்றார்.