காதல் காற்று போன்றது. அதை உணர தான் முடியும் பார்க்க முடியாது. காதலுக்கு கண்ணில்லை என்பதை எல்லாம் நாம் காலம், காலமாக கேட்டு வரும் லவ்தீக வாக்கியங்கள்.
ஆனால், இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தை சிறப்பாக செய்து காட்டியுள்ளார் டெக்சாசை சேர்ந்த ஒரு பலே கில்லாடி காதலர்.
பார்தோலோமிவ்!
இவர் பெயர் அலெக்ஸ் பார்தோலோமிவ். இவர் செய்த ப்ரபோஸ் காட்சியை சினிமா வி.எப்.எக்ஸில் மட்டும் தான் நாம் எதிர் பார்க்க முடியும்.
வேலையே இதுதான்!
அலெக்ஸ் பார்தோலோமிவின் வேலையே சூறாவளி காற்றுகளை பின்தொடர்ந்து செல்வது தான். இதை ஆங்கலத்தில் Storm Chaser Profession என்பார்கள்.
இரு காதல் ஒருசேர…
ஆண்கள் எப்போதுமே, வேலை, காதலி இரெண்டுமே இரு கண்கள், இரு காதல் என லடாய் டயலாக் விடுவார்கள். இதை மெய்பித்து, தனது சூறாவளி பின்தொடரும் காதலையும், காதலியை பின்தொடரும் காதலையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்த்துள்ளார் அலெக்ஸ்.
பிரிட்னி ஃபாக்ஸ் கேய்டன்!
அலெக்ஸ்-ன் காதலி பிரிட்னி ஃபாக்ஸ் கேய்டன். டெக்சாஸ்-ல் கண்ணுக்கு எட்டும் தொலைவில் அபாயகரமான சூறாவளி கற்று சுழன்று அடித்துக் கொண்டிருந்த தருணத்தில். பிரிட்னி ஃபாக்ஸ் கேய்டனிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் அலெக்ஸ்.
அச்சம்!
எனக்கு சூறாவளி காற்றை கண்டு அச்சம் வரவில்லை. பிரிட்னி ஃபாக்ஸ் கேய்டனிடம் ப்ரபோஸ் செய்து, அவர் என்ன பதில் கூறுவார் என்பதில் தான் அச்சம் இருந்தது என ஒரு நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் அலெக்ஸ் கூறியுள்ளார்.
துணை!
அலெக்ஸ் உடன் துணையாக சூறாவளி காற்றை பின்தொடர்ந்து தானும் சென்றுள்ளேன் என பிரிட்னி ஃபாக்ஸ் கேய்டன் கூறியுள்ளார். கடந்த வருடம் தான் முதல் முறையாக நாங்கள் முதல் முறையாக சென்றோம்.
ப்ரபோஸ் செய்த போது கண்ட சூறாவளி தான் நான்கள் இருவரும் நேரில் கண்ட முதல் சூறாவளி காற்று என அலெக்ஸ் கூறியுள்ளார்.
2019ல்!
இவர்கள் இருவரும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதாவது 2019ல் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர். ஜாசன் கூலே என்பது இந்த இனிய தருணத்தை புகைப்படம் எடுத்துள்ளார்.
மாஸ்!
கேண்டில் லைட் டின்னர், ஒயின் கிளாஸ்-ல் மோதிரம் மறித்து வைப்பது, ரோசா பூ நீட்டுவது எல்லாம் ஒருபுறம் இருக்க. தனது வேலை பாணியில் மாஸான ப்ரபோஸ் சம்பவத்தை சிறப்பாக செய்துள்ளார் அலெக்ஸ்.