அமைச்சரவை மாற்றம் இன்றைய தினமும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று இடம்பெறவுள்ள இந்த அமைச்சவை மாற்றத்தில பிரதி அமைச்சர்களின் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் 10 தொடக்கம் 11 பிரதி அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், பிரதி அமைச்சர்கள் மற்றும் சில இராஜாங்க அமைச்சர்களின் பதவிகள் விரைவில் மாற்றப்படும் என அண்மையில் பிரதி அமைச்சர்களான ரஞ்சன் ராமநாயக்க மற்றும் அஜித் பி.பெரேரா ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, அண்மையில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.