தமிழகத்தில் திருமணமான 21 நாட்களிலேயே புதுமண தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரின் சேத்தியாத்தோப்பு மேட்டுத் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன், இவருக்கும் வானதிபுரத்தை சேர்ந்த கௌசல்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 8ம் திகதி திருமணம் நடந்தது.
டிப்ளமோ படித்துள்ள பாண்டியராஜன் விவசாய வேலை செய்து வந்துள்ளார். இது கௌசல்யாவுக்கு பிடிக்காததால் வேறு வேலை செய்யும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, நேற்றும் சண்டை முற்றவே விரக்தியில் இருந்த கௌசல்யா விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதை பார்த்த பாண்டியராஜன் என்ன செய்வதென்று தெரியாமல், மீதியிருந்த விஷத்தை குடித்து மயக்கமடைந்துள்ளார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். செல்லும் வழியிலேயே கௌசல்யாவின் உயிர்பிரிந்துள்ளது, சிறிது நேரத்தில் பாண்யடிராஜனும் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.