சுவிட்சர்லாந்து நாட்டில் காதலியின் மனதை கவரும் நோக்கில் நபர் ஒருவர் 500 கி.மீ தூரத்தை ஓடி வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த Izyaslav Koza(33) என்ற நபர் உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளர். இருவரும் அமெரிக்காவில் தான் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், காதலை ஏற்பதற்கு முன்னர் சுவிட்சர்லாந்து நாட்டில் ஒரு எல்லையில் இருந்து மற்றொரு எல்லை வரை ஓட முடியுமா? என அப்பெண் கேட்டுள்ளார்.
பெண்ணின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நபர் கடந்த 22-ம் திகதி சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இத்தாலி எல்லையில் உள்ள Müstair என்ற பகுதியில் இருந்து தனது ஓட்டத்தை தொடங்கியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் 50 கி.மீ தூரம் வரை ஓடியுள்ளார். செல்லும் வழியில் இரவை கழிக்க ஹொட்டல்களில் தங்கியுள்ளார். இதற்கான செலவுகள் அனைத்தையும் அவரே ஏற்றுக்கொண்டுள்ளார்.
காதலிக்காக முயற்சியை கைவிடாத அந்நபர் இறுதியாக நேற்று ஜெனிவாவில் உள்ள Chancy என்ற பகுதியை அடைந்து தனது சாதனையை முடித்துள்ளார்.
அதாவது, தனது பயணத்தில் அவர் தொடர்ச்சியாக 500 கி.மீ தூரத்தை ஓடியே கடந்துள்ளார்.
இத்தகவலை காதலியிடம் தெரிவித்ததும் அவர் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணமாக நேற்று இருவரும் நேரில் சந்தித்துள்ளனர்.
இதுமட்டுமில்லாமல், அப்பெண்ணிடம் காதலை தெரிவித்ததும் அவர் காதலை ஏற்றுக்கொண்டதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக நபர் உற்சாகமாக தெரிவித்துள்ளார்.