பெண்களின் அந்தரங்க பகுதியில் துர்நாற்றம் வருவது அவர்களது உடல்நிலையை பொறுத்து மாறுபடும்.
ஆரோக்கியமான நிலையில் இருந்தால் அதன் பிஎச் அளவானது 4.5 ஆகும்.
பக்டீரியாக்களின் தொற்று அதிகமாக இருப்பின் அதிலிருந்து வெளிப்படும் திரவமே நாற்றத்திற்கு காரணமாகிறது.
அழுகிய மீன் நாற்றம் போன்று இருந்தால் Vaginosis தொற்றுநோய்களின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, உடனே மருத்துவரை அணுகி தெரிந்துக்கொள்ளுங்கள்.
அரிப்புடன் கூடிய நாற்றம் ஏற்பட்டால் அது நிச்சயம் ஈஸ்ட் தொற்றாகத் தான் இருக்கும்.
சிறுநீர் பாதையில் தொற்று இருப்பின் அம்மோனியா வாசனையை போன்று இருக்கும், இதற்கு அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும், தொடர்ந்து பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகலாம்.
இதுதவிர மாதவிடாய் காலங்களின் போதும் பொதுவாகவே நாற்றம் இருக்கும், ஒருவேளை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அது இரும்பு சத்தின் குறைபாடாககூட இருக்கலாம், மருத்துவரின் அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது அவசியம்.