இந்தியாவில் குடிபோதையில் தனது 4 வயது மகளுடன் பாலத்திலிருந்து தந்தை கீழே விழுந்ததில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தியாவின் மும்பையில் கல்போல் கிராமத்தில் வசித்து வருவபர் நிலேஷ் சத்வி(30), இவர் தனது மனைவி மற்றும் மகள் கெளரி (4) ஆகியோருடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
திருமணத்தில் நிலேஷ் மது அருந்தியுள்ளார். பின்னர், அங்கிருந்து தங்கள் வீட்டை நோக்கி மூவரும் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
கெளரியை தனது தோளின் மேல் தூக்கி வைத்து கொண்டு மது போதையில் தள்ளாடியபடியே நிலேஷ் சாலையில் நடந்து வந்துள்ளார்.
அப்போது 15 அடி கொண்ட பாலத்தின் மேல் அவர்கள் நடந்து சென்ற போது நிலைதடுமாறிய நிலேஷ், கெளரியுடன் பாலத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்த கெளரியின் மண்டை ஓடும், விலா எலும்பும் உடைந்துள்ளது, இதன்பின்னர் கெளரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மகளுடன் கீழே விழுந்த நிலேஷ் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார்.
இதுகுறித்து கெளரியின் தாய் கூறுகையில், திருமண வீட்டில் என்னிடம் தவறாக நடந்து கொண்டதாக மூன்று நபரிடம் நிலேஷ் சண்டை போட்டார்.
பின்னர், அந்த கோபத்தில் கெளரியின் கழுத்தை நிலேஷ் நெரித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கூறிய பொலிசார், தற்போது இந்த வழக்கை விபத்தாக தான் பதிவு செய்துள்ளோம்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மற்றவைகளை கூற முடியும் என தெரிவித்துள்ளனர்.