Loading...
சினிமா மீதான கூடுதல் வரியை நீக்காவிட்டால் சினிமாவை விட்டே விலகுவேன் என நடிகர் கமலஹாசன் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரி 28% உயர்த்தப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பேசிய நடிகர் கமலஹாசன் , சினிமா என்பது சூதாட்டம் அல்ல.. அது ஒரு கலை.
Loading...
ஹாலிவுட் படங்களுக்கு நிகராக 28 சதவிகிதம் வரி விதிப்பது தேவையற்றது. இந்தி சினிமாவையும், தமிழ் சினிமாவையும் ஒரே அளவுகோலில் பார்க்கக்கூடாது.
டிக்கெட் மீதான 28% ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தினால் சினிமாவை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை. ஜிஎஸ்டி வரியை விலக்காவிடில் சினிமாவை விட்டு விலகுவேன் என அறிவித்துள்ளார்.
Loading...