பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதற்கு இந்தியா, பிரான்ஸ், கனடா உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜீக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில், பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதற்கான முடிவு சுற்றுசூழலையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும்.
நம்முடைய குழந்தைகளின் எதிர்காலம் பாதிப்படையும், எங்கள் நிறுவனம் சார்பாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளோம்.
நம் அனைவரும் ஒன்றிணைந்து பருவநிலை மாற்றத்திலிருந்து உலகை காப்பாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.