மாகாண ஆளுனர்களின் அதிகாரங்களை குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாகாண ஆளுனர்களின் அதிகாரங்களை குறைக்க வேண்டுமென சிறுபான்மையின அரசியல் கட்சிகள் பல அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இது தொடர்பில் அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்களுக்கும், மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாண ஆளுனர்கள் மாகாணசபை நிர்வாகங்களில் தேவையின்றி தலையீடுகளை செய்வதாகவும் இதனால் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த யோசனைத் திட்டம் புதிய அரசியல் சாசன சபையிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த விடயம் குறித்து அனைத்து மாகாண முதலமைச்சர்களுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.