Loading...
பிரபல நடிகர் சாமிக்கண்ணு சென்னையில் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.
கடந்த 1954-ம் ஆண்டு வெளியான ‘புதுயுகம்’ என்ற படத்தில் சாமிக்கண்ணு அறிமுகம் ஆனார். அன்னக்கிளி, வண்டிச் சக்கரம், ஜானி, முள்ளும் மலரும், போக்கிரி ராஜா, சகலகலாவல்லவன், என் ராசாவின் மனசிலே, மகா பிரபு உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
டைரக்டர்கள் மகேந்திரன், ராமநாராயணன், ராஜ சேகர், ராஜ்கிரண் உள்ளிட்ட பலருடன் சாமிக்கண்ணு இணைந்து பணியாற்றியுள்ளார். தனது 8 வயதில் இருந்தே நாடகக் கம்பெனிகளில் பணிபுரிந்துள்ளார்.
Loading...
வயோதிகம் காரணமாக சாமிக்கண்ணு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் மரணம் அடைந்தார்.
சாமிக்கண்ணுவின் இறுதிச்சடங்கு சென்னை பள்ளிக்கரணை மயானத்தில் இன்று மாலை 4மணிக்கு நடைபெறுகிறது.
மறைந்த நடிகர் சாமிக்கண்ணுவுக்கு தயானந்தன் உள்பட 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.
Loading...