இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் போது அவதானமாக இருக்க வேண்டும் என சில உலக நாடுகள் தமது பிரஜைகளுக்கு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாகவே இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் காரணமாக இலங்கையின் உள்ளக போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய சேவைகளை பயன்படுத்துவது குறித்து வெளிநாட்டுப் பிரஜைகள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என பிரித்தானிய பொதுநலவாய அலுவலகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
சுற்றுலா பயணிகள் தாம் பயணிக்க விரும்பும் இடங்களுக்கு செல்வதற்கு முன்னர்,
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதிபெற்று பயணங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்தியமாகாணங்களுக்கு பயணிக்கும் தமது பிரஜைகள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அவுஸ்திரேலிய வெளியுறவு தரப்பும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.