Loading...
ஆப்கானிஸ்தான் மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.
முதல் 20 ஓவர் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டம் நேற்று நடந்தது. மழையால் ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் 3 விக்கெட் இழப்புக்கு 112 ரன் எடுத்தது.
Loading...
டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆப்கானிஸ்தானுக்கு 15 ஓவர்களில் 123 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 13.3 ஓவர்களில் 93 ரன்னில் சுருண்டது.
இதனால் 29 ரன்னில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் போட்டியில் வென்றதால் வெஸ்ட்இண்டீஸ் தொடரை கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் நாளை நடக்கிறது.
Loading...