காலநிலை மாற்றம் குறித்த பரிஸ் உடன்படிக்கையிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளமையினால் எதிர்காலத்தில் அமெரிக்கா தனிமைப்படுத்தப்படும் என ஈரான் கூறியுள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் பக்ரம் காசெமி கூறுகையில், “பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளது அமெரிக்காவின் பொறுப்பற்ற நடவடிக்கையை காட்டுகிறது. இந்த நடவடிக்கை மூலம் அந்நாடு எதிர்காலத்தில் தனிமைப்படுத்தப்படும்” என்று கூறினார்.
ஆயுத பரிமாற்ற முறையில் இருநாடுகளுக்குமிடையில் குழப்பநிலை நீடிக்கின்ற நிலையில் ஈரான் இவ்வாறு கூறியுள்ளமை அமெரிக்காவை மேலும் ஆத்திரமடைய வைத்துள்ளது.
உலகலாவிய பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் வகையில் உலகின் சுமார் 195 நாடுகள் செய்துகொண்ட பரிஸ் உடன்படிக்கையானது அமெரிக்காவில் மில்லியன் கணக்கான வேலையிழப்புக்களுக்கு வழிவகுக்கும் என்றும் அது அமெரிக்காவுக்கான தண்டனையாக அமையும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.