லண்டனில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம் வெளியிட்டுள்ளார்.
”இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்கள் ஒரு கொடூரமான செயல்” இந்த தாக்குதல் காரணமாக லண்டனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் வலைத்தளத்திலேயே ஜனாதிபதி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தற்போது வரையில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் 48 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை,இந்த தாக்குதலினால் லண்டனில் வாழும் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இதுவரையில் அவ்வாறான செய்தி ஒன்றும் பதிவாகவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.