லண்டனில் நடந்த இரு தாக்குதல் சம்பவங்களையடுத்து, அவசர பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்திற்கு பிரதமர் தெரேசா மே, உயர்மட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது ஒரு தீவிரவாத தாக்குதலே என கூறியுள்ள அவர் இதற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் 8ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இத்தேர்தலில் ஏதேனும் அசாம்பாவிதம் நிகழாத வண்ணம் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்தும், அண்மைய காலமாக இடம்பெற்றுவரும் தொடர் தீவிரவாத தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்தும் இக் கூட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மஞ்செஸ்டர் நகரில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்குள் இச்சம்பவம் நடந்துள்ளமையானது, அங்குள்ள மக்களின் அச்ச நிலையை மேலும் அதிகரித்துள்ளது.
லண்டனில் நடந்த இரு தாக்குதல் சம்பவங்களில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் மூன்று தாக்குதல்தாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.