மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும்என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்றைய காலநிலை தொடர்பில் கருத்து வெளியிட்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன்,
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் ஆகிய மாகாணங்களில் இடையிடையே மழைபெய்யும்.
கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் வவுனியா மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழைபெய்யும்.
மாத்தளை, பொலனறுவை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்போது மணிக்கு 50கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
கடற்பிராந்தியங்களும் சற்றுகொந்தளிப்பாகக் காணப்படும் என்று குறிப்பிட்டார்.
அத்துடன், தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காலநிலையின்போது, வடக்கு, கிழக்கில்வரட்சியான காலநிலையே நிலவும்.
எனவே, யாழ். மாவட்டம் உட்பட வடக்கின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக வரட்சிநிலவும் என்று கூறப்படுகின்றது.