லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் பலியாகியிருப்பதாகவும், மற்றொருவர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாக பிரான்ஸ் நாட்டின வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7-பேர் பலியாகியுள்ளனர். 48-பேர் காயமடைந்துள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர்.
பிரித்தானியாவையே உலுக்கிய இத்தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர தாக்குதலில் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் Jean-Yves Le Drian கூறுகையில், லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதலின் போது காயமடைந்திருப்பவர்களில் 7-பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த 7 பேரில் 3-பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதுடன் ஒருவர் பலியாகிருப்பதாக தெரிவித்துள்ளார்,
இதே வேளை அங்கு பாதிப்புக்குள்ளாகியுள்ள பிரான்ஸ் மக்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது கேட்டறிந்து வருவதாகவும் கூறியுள்ளார்.