ஒடிசாவில் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்துக் கொன்றது தொடர்பாக 10 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் தோமுஹனி கிராமத்திற்குள் சென்ற பெண்ணை, அங்கிருந்தவர்கள், குழந்தை கடத்தும் பெண் என்று கூறி அவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
தப்பிக்க முயன்ற அவரை, கற்களை வீசி தாக்கியும், கம்பால் தாக்கியும் சித்ரவதை செய்துள்ளனர். இதில், அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார்.
இந்நிலையில் இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, இறந்துபோன அந்தப் பெண் மயூர்பஞ்ச் மாவட்டம் அன்லா கிராமத்தைச் சேர்ந்த பசந்தி மொகந்தா (48) என்பது தெரியவந்தது.
மேலும், அவர் பாரிபடா நகரின் கலிகாபூர் பகுதியில் வசிக்கும் தனது மகளை பார்க்க சென்றுள்ளார். அங்கிருந்து சென்றவரை ஜூன் 1-ஆம் திகதி முதல் காணவில்லை. இதுபற்றி காவல் நிலையத்தில் அவரது மகள் புகார் அளித்துள்ளார்.
தோமுஹனி கிராமத்திற்கு சென்றபோது, குழந்தை கடத்தும் பெண் என நினைத்து அடித்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது என பொலிசா தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த கொலை தொடர்பாக இதுவரை 10 பேரை கைது செய்திருப்பதாகவும், மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.