சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும் நாள். சுற்றத்தார்கள் உங்கள் முன் னேற்றம் கண்டு வியப்பர். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். மறைமுகப் போட்டிகளைப் சமாளிக்க மாற்றினத் தவர்கள் கைகொடுத்து உதவுவர்.
உதிரி வருமானங்கள் வந்து சேரும் நாள். உடல்நலப் பாதிப்புகள் அகலும். மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறலாம். இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்யோக மாற்றம் உருவாகலாம்.
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். வாகன யோகம் உண்டு. வரவு திருப்தி தரும். பெற்றோர்களால் ஏற்பட்ட பிரச் சினை தீரும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பர்.
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக முடியும். காணாமல் போன பொருளொன்று மீண்டும் கைக்கு கிடைக்கலாம். வருமானம் திருப்தி தரும்.
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிப்பீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
விருப்ப ஓய்வு பற்றிய சிந்தனை மேலோங்கும் நாள். வீட்டில் உள்ள வர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வதால் விருப்பங்கள் நிறைவேறும். வரவை விட செலவு கூடும். மனதில் இனம் புரியாத கவலை குடிகொள்ளும்.
பிரச்சினைகள் அதிகரிக்கும் நாள். பிடிவாத குணத்தை தளர்த் திக் கொள்வது நல்லது. வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
நினைத்தது நிறைவேறும் நாள். நிதி நிலை உயரும். சுபகாரியப் பேச்சுக்களை முடிக்க சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். குடும்பத்தினர் களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாள். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். வருங்காலக் கனவுகளை நனவாக்க பயண மொன்றை மேற்கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும்.
முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். வருமானத்தடை அகலும். நண்பகலுக்கு மேல் நல்ல தகவல் வந்து சேரும்.
மனக்குழப்பம் அகலும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். காலையில் செய்ய மறந்த காரியமொன்றை மாலையில் துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். ஆலய வழிபாடு ஆனந்தம் வழங்கும்.
அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அலைச்சல்களை சந்திக்க நேரிடும். நண்பர்கள் மனம் கோணாது நடந்து கொள்வது நல்லது.