தவறிழைத்தது எவராக இருந்தாலும் அவர்களது தகுதி, தராதரம் பாராது சட்டம்நடைமுறைப்படுத்தப்படும். சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
பொதுபலசேனா அமைப்பின்பொதுச் செயலாளர் ஞானசார தேரரைக் கைது செய்வதற்கு நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
சட்டம் அனைவருக்கும் சமமானது. சட்டம் மீறப்படுகின்ற ஒவ்வொருசந்தர்ப்பத்திலும் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள்கடமைப்பட்டுள்ளோம்.
எந்த வேளையிலும் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும்நாம் மேற்கொண்டுள்ளோம்.
உரிய நீதிமன்ற உத்தரவுக்கமைவாக, சட்டமா அதிபரின் ஆலோசனைக்கேற்ப எமதுவிசாரணையின் விளைவாக கைது செய்யும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டுள்ளோம்.
நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாகவும்பல்வேறு இடங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த இடத்தில் நான்தெளிவாக ஒரு விடயத்தைச் சொல்லவேண்டும்.நாங்கள் ஒரு தரப்புக்கு, ஓர் இனம், மதம் அன்றில் அரசியல் தேவைப்பாடுகளுக்காகநடவடிக்கை எடுப்பதில்லை.
எவராகிலும் தவறு செய்தால் தவறு தான். அந்தத் தவறுஇழைத்தவர் யார்?அவரின் தராதரம் என்ன? என்பது எமக்கு அவசியம் இல்லை.
அந்தத்தவறுக்கேற்றவாறு நாம் நீதிமன்ற நடவடிக்கையை கடந்த காலங்களிலும் எடுத்துள்ளோம்.முடிந்தவரை விரைவாகக் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வோம்.
ஞானசார தேரரின்நடவடிக்கைகளை விசாரிக்க 4 சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அந்தநடவடிக்கைகளை ஒன்றிணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
சட்டத்தையும்ஒழுங்கையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்” – என்றார்.