ஜூன் மாதத்துக்குரிய நாடாளுமன்ற அமர்வு நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
இவ்வாரத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள விடயதானங்கள் பற்றி இதன்போதே இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.
சீரற்ற காலநிலையால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் தொடர்பிலும் விவாதம் நடைபெறவுள்ளது. அதற்குரிய தினமும் நாளை செவ்வாய்க்கிழமைதான் தீர்மானிக்கப்படும்.