நாட்டில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவிற்கு சட்டவிரோத கட்டட நிர்மாணங்களே பெரிதும் காரணமென குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்ற நிலையில், இவ்வாறான கட்டட உரிமையாளர்கள் மற்றும் கம்பனிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நீர் வழிந்தோடும் கால்வாய்களை மறித்து இவ்வாறு கட்டடங்களை நிர்மாணித்துள்ளமையே சேத அதிகரிப்புக்கு காரணமென தெரிவித்துள்ள நகர அபிவிருத்தி அமைச்சு, இன்று (திங்கட்கிழமை) முதல் இது குறித்து ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக கொழும்பில் மாத்திரம் சுமார் 10 ஆயிரம் சட்டவிரோத கட்டங்கள் அங்கீகாரம் பெறப்படாமல் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நபர அபிவிருத்தி அமைச்சு, இவ்வாறான கட்டங்கள் தொடர்பில் எதிர்வரும் மூன்று மாதங்களில் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணித்து மதிப்பீடொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் மேலும் தெரிவித்துள்ளது.