கூகுள் நிறுவனமானது விளம்பர சேவையினை வழங்கி வருகின்றமை அனைவரும் அறிந்ததே.
எனினும் பல்வேறு இணையத்தளங்களையும் பயன்படுத்துபவர்கள் வைரஸ் தாக்கங்கள் மற்றும் இடையூறுகள் காரணமாக விளம்பரங்களை காட்சிப்படுத்தாதவாறு Ad Blocker இனை பயன்படுத்தி வருகின்றனர்.
இது ஒரு இணைய உலாவிக்குரிய நீட்சியாகும். இதனைப் பயன்படுத்தி அனைத்து வகையான விளம்பரங்களையும் தடைசெய்துகொள்ள முடியும்.
இவ்வாறான செயற்பாட்டினால் கூகுளின் விளம்பரதாரர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இதனை தவிர்ப்பதற்காக கூகுள் நிறுவனம் ஓர் அதிரடி செயற்பாட்டில் இறங்கியுள்ளது.
அதாவது இணைய உலாவியில் Ad Blocker நீட்சியை பயன்படுத்தும் ஒரு பயனரிடமிருந்து விளம்பரதாரர்கள் குறிப்பிட்ட தொகை பணத்தினை அறவீடு செய்ய முடியும்.
இதற்கிடையில் தடைசெய்யப்பட்ட விளம்பரங்களை காட்சிப்படுத்துக அல்லது தடை செய்வதற்கு பணம் செலுத்துக என்ற செய்தியை குறித்த பயனர்களுக்கு கூகுள் நிறுவனம் அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப் புதிய முறை வட அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் முதலில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
விளம்பரதாரர்களை பாதுகாக்க கூகுள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை பயனர்களை பாதிக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.