இந்தியாவின் மிகப்பிரபலமான ஸ்டார் சல்மான் கான் 51 வயதை கடந்துவிட்டாலும், தற்போது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை.
ஆனால், இவர் டேட்டிங் செய்த பெண்களின் எண்ணிக்கை அதிகம். மேலும், காதல் பிரிவுகளையும் சந்தித்த இவர், தனது முன்னாள் காதலிகளுடன் நல்ல நட்புறவுடன் இருக்கிறார்.
பாலிவுட்டின் முன்னணியில் இருந்து பின்னணி நடிகைகள் வரை பலரையும் இவர் விரும்பியுள்ளார்.
அந்த வகையில், நிருபர் ஒருவர் சல்மான் கானிடம் எப்படி நீங்கள் இன்றளவும் உங்கள் முன்னாள் காதலிகளுடன் நட்பாக இருக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைக்க அதற்கு அவர், பல இளைஞர்களுக்கும் உதவும் வகையிலான டிப்ஸ் ஒன்றை கூறியுள்ளார்.
அதாவது, எனது முன்னாள் காதலிகள் நான் அவ்வளவு மோசமானவன் அல்ல என்பதை உணர்ந்தார்கள். ஏனெனில் நான் எப்போதும் அவர்கள் மகிழ்வாக இருக்க விரும்புவேன். அவர்களுக்கு உறுதுணையாக, நல்ல நபராக, நல்ல நண்பனாக இருந்தேன் என சல்மான் கான் கூறினார்.
எனவே காதல் பிரிவு ஏற்பட்டாலும் கூட, தனது முன்னாள் காதலிக்கு நல்லது செய்வதுடன், அவர்களுக்கு ஒரு நல்ல நண்பனாக நீடித்திருந்தாலே, அவர்கள் நம்முடன் ஒரு நல்ல உறவில் இருப்பார்கள் என்று சல்மான் கான் கூறியுள்ளார்.