மனநலம் பாதிப்பட்ட இளைஞர் ஒருவரால் அவரது தாய் மற்றும் சகோதரி கடுமையாக தாக்கப்படுவதாக அவரின் தாயாரால் கல்கமுவ காவற்துறையில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த முறைப்பாட்டிற்கு அமைய கைது செய்யப்பட்ட சந்தேகநபரான குறித்த இளைஞரை இம்மாதம் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கமுவ நீதவான் உத்தரவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் , கல்கமுவ காவற்துறை பிரிவிற்கு உற்பட்ட கல்கமுவ , கொஜராகம பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞராவார்.
குறித்த இளைஞர் இதற்கு முன்னரும் இவ்வாறு தனது தாய் மற்றும சகோதரியை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் , கடந்த வெசாக் பௌர்ணமி தினத்தில் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.எவ்வாறாயினும் , கடந்த மாதம் 14ம் திகதி தனது தாய் கடுமையாக தாக்கிய குறித்த இளைஞர் அவர்களை கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனை தொடர்ந்து , அவரின் தாயாரால் மீண்டும் கல்கமுவ காவற்துறையில் மகனுக்கு எதிராக முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில் , கடந்த தினத்தில் குறித்த வழக்கு கல்கமுவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , பல திடுக்கிடும் தகவல்களை அவரின ்தாய் தெரிவித்துள்ளார்.
தனது மகன் தொடர்ந்து தன்னையும் தனது மகளையும் தாக்கி வருவதாகவும் , மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் பாம்புகள் மற்றும் எலிகளை பிடித்து சாப்பிடுவதாகவும் அவரின் தாய் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக தனது மகனைமனநல புனர்வாழ்வு முகாமில் சேர்க்குமாறு அவரின் தாய் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.இந்நிலையில் , சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நிலையில் குறித்த இளைஞர் தொடர்பில் மருத்துவ அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இதன் போது உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.