Loading...
மட்டக்களப்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் வைத்து மோட்டார் சைக்கிள் வானொன்றில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவருமே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
Loading...
வானை திருப்ப முனைந்த போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், வானின் மீது மோதுண்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், படுகாயமடைந்த இளைஞர்கள் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...