பிரபாஸுடனான காதல் கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை அனுஷ்கா. பாகுபலி படத்தில் நடிக்கும்போது பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக பேசப்படுகிறது. தெலுங்கு திரையுலகில் திரும்பும் பக்கம் எல்லாம் இந்த பேச்சு தான்.
காதல் கிசுகிசுக்களால் அனுஷ்கா டென்ஷனின் உச்சத்தில் உள்ளாராம். பிரபாஸுடன் காதலா என்று கேட்டால் வெட்கப்பட்டு சிரித்தார் அனுஷ்கா. இதனால் காதல் உறுதி என்று ஆளாளுக்கு பேசினார்கள். இந்நிலையில் காதல் கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அனுஷ்கா.
நானும், பிரபாஸும் டேட் செய்யவில்லை. நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே. காதல் எல்லாம் இல்லை என்று அனுஷ்கா தற்போது தெரிவித்துள்ளார். இதை கேட்டு ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ரீலில் மட்டும் அல்ல ரியலிலும் நல்ல ஜோடியாக இருக்கும் அனுஷ்கா, பிரபாஸ் திருமணம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தேவசேனாவின் இந்த அறிவிப்பு கவலை அளித்துள்ளது.
பிரபாஸ் சுஜீத் இயக்கத்தில் சாஹோ படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு இன்று துவங்கும் என்று கூறப்படுகிறது. படத்தில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம்.