குழந்தைகள் அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருக்கும். இதற்கு மூளையின் அமைப்பே காரணம். பகுத்துணரும் திறனும் ஒரு காரணம்.
ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகள் குத்தறிந்து செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால் எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆண்களின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
வாகனம் ஓட்டுதல்:
வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம் பயணிக்கும் திசை வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை விரைவாக கணித்து அதற்கு ஏற்றாற்போல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும். ஆனால் பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புகளை மேற்கொள்ளும்.
இதற்கு காரணம் பெண்களின் பல பணிகளை செய்யும் மூளைத் திறன் ஆகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையை கேட்டுக்கொண்டிருந்தாலும் ஆண்களின் கவனம் வாகனம் செலுத்துவதில்தான் இருக்கும். ஆனால் பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால்தான் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.
பேச்சு:
ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும்போது பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்து கொள்வார்கள். ஆனால் பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணர முடிவதில்லை.
காரணம் பெண்கள் பேசும் போது 70 சதவீத மொழியையும் 20 சதவீத உடல் மொழியையும் 10 சதவீத வாய்மொழியையும் உணர்த்துகின்றனர். அதனால் ஆண்கள் மூளையால் பெண்கள் கூறுவது பொய் என்பதை உணர முடியாது.
தீர்வுகள்:
பல பிரச்சனைகள் இருக்க ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரிந்து ஒவ்வொன்றிற்க்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும் இதனால் பிரச்சனையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.
ஆனால் பெண்களின் மூளை தனித்தனியே பிரித்தறியாது…யாராவது ஒருவரிடம் தமது மொத்த பிரச்சனைகளையும் சொல்லி விட்டால் பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நிம்மதியாக தூங்கிவிடுவார்கள். ஆண்களின் மூளையின் வேகம் பதிப்பு வெற்றி செயலாக்கம் என்ற வகையில் அமைந்திருக்கும். பெண்களின் மூளை குடும்பம்இ உறவுகள்இ நட்பு ரீதியாக அமைந்திருக்கும்.
மனம்:
வீட்டில் பிரச்சனை என்றால் பெண்களின் மனம் வேலையில் கவனம் செலுத்தாது. வேலையில் பிரச்சனை என்றால் ஆண்கள் மனம் உறவுகளில் கவனம் செலுத்தாது. பெண்கள் உரையாடும் பொழுது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால் ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.
ஞாபக சக்தி:
ஆண்களால் எதையும் அதிகம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. அதனால் தான் வீட்டில் உள்ளவர்களின் பிறந்தநாள் திருமணநாள் இவற்றை அவர்கள் அறிந்திருப்பதில்லை. ஆனால் பெண்களால் வீட்டில் உள்ளவர்கள் மட்டும் அல்ல வெளியில் உள்ள ஊறவினர்களின் முக்கிய தினங்களை கூட ஞாபகம் வைத்திருக்க முடியும்.
பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆனால் ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள். ஆண் பெண் உறவுகளில் ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல் காரணங்களை தெரிந்து நடந்தால் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை எளிதாக சமாளிக்கலாம். வாழ்வும் இன்பமயமாகும்.