இவருடைய தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘செம’. இப்படத்தை வள்ளிகாந்த் என்பவர் இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா பினு, மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பாண்டிராஜ் கலந்துகொண்டு பேசும்போது,
வள்ளிகாந்த் எந்த ஒரு விஷயத்தையும் முகத்துக்கு நேரே சொல்லுபவன், அதுதான் அவனை என் உதவியாளராக நான் சேர்த்துக் கொள்ள முக்கிய காரணம். என்னிடம் நிறைய திட்டு வாங்கிய உதவி இயக்குனரும் அவன் தான். அவனுக்கு என்ன செய்வது என யோசித்து தான் இந்த படத்தை தயாரித்தேன். ஒரு படம் எடுப்பதே ரொம்ப கஷ்டமான விஷயம். ஒரே நேரத்தில் ஜி.வி. 12 படம் நடிப்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஜிவியுடன் கூடிய விரைவில் ஒரு படத்தில் இணைவேன் என்றார்.
பாண்டிராஜ் அடுத்ததாக சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் முடிந்தபிறகு ஜி.வி.பிரகாஷுடன் இணையும் படம் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.