Loading...
கடந்த ஆட்சிகாலத்தில் புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதால் 400 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதாக, கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2013ஆம் ஆண்டு கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு கொழும்பில் நடைபெற்ற நிலையில் அதில் பங்கேற்ற தலைவர்களுக்காக புதிதாக சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
Loading...
அந்த வகையில் இதில் பங்கேற்ற வெளிநாட்டுத் தலைவர்களின் பயன்பாட்டுக்காக, 82 சொகுசு வாகனங்களை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இறக்குமதி செய்திருந்தது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் பின்பு குறைந்த விலைக்கு விற்கப்பட்ட நிலையிலேயே இலங்கை அரசாங்கத்திற்கு 400 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதாக கணக்காய்வாளர் திணைக்களம் கூறியுள்ளது.
Loading...