உடன்பிறப்புக்களான அண்ணனும் தங்கையும் திருமணம் செய்து கொண்டு மறைந்திருக்கையில் அவர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை கேகாலையில் இடம்பெற்றுள்ளது.
இவர்களில் தங்கை களனிப்பிரதேச பெறாத பெற்றோர்களால் சிறு வயதிலிருந்து தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர் என்றும் தற்போது அவருக்கு வயது 21 எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெறாப் பெற்றோரின் அரவணைப்பில் வளர்க்கப்பட்ட இந்த இளம் பெண்ணின் சகோதரன் பல இடங்களிலும் தேடி ஒருவாறு தனது சகோதரியை கண்டு பிடித்துள்ளார்.
இருவரும் இரத்த உறவு சகோதரர்கள் என்பதால் இந்த யுவதியை வளர்த்தவர்களும் மேற்படி இருவருக்கும் எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை.
இருவரும் பல இடங்களுக்கும் சுதந்திரமாக போய் வந்துள்ளனர்.
எனினும் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியேறிச் சென்ற இருவரும் வீட்டுக்கு திரும்பி வராமையால் பொலிஸ் நிலையங்களுக்கு பெற்றோர் அறிவித்துள்ளனர். இறுதியாக கேகாலையில் கிராமப் பகுதியொன்றில் இவர்கள் மறைந்திருக்கும் விடயம் தெரியவந்துள்ளது.
இரத்த உறவு சகோதரர்கள் என்பதால் திருமணச் சட்டத்திற்கிணங்கவும் சமய சம்பிரதாயங்களுக்கிணங்கவும் திருமணம் செய்ய முடியாதென்பதால் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளர்.