இந்தியாவின் கொடைக்கானல் அருகே பெற்ற மகளையே குடிபோதையில் பாலியில் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ளது பெருமாள்மலை கிராமம். இங்கு வசித்து வருபவர் சின்னச்சாமி. கூலி வேலை செய்து வரும் அவருக்கு 14 வயதில் பெண் பிள்ளை உள்ளது.
குடிபழக்கம் உள்ள சின்னச்சாமி, தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக யாரிடமும் கூறக்கூடாது எனவும் தனது மகளையும் அவர் மிரட்டி வந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சின்னச்சாமியின் மனைவி அதிர்ச்சியடைந்து, இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து சின்னச்சாமியை கைது செய்த போலீசார், மகிளா நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி, பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த சின்னச்சாமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும் 2000 ரூபாய் அபதாரம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார்.