Loading...
அன்றாடம் நம் வீட்டில் கொசுக்களின் தொல்லையை ஒழிக்க பயன்படுத்தும் கொசுவர்த்தி மருந்தின் மூலம் எவ்வளவு ஆபத்து உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
Loading...
கொசுவர்த்தி மருந்தை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்
- கொசுவர்த்தி சுருளானது அலெத்ரின், ஈஸ்பயோத்ரின் போன்ற செயற்கையான வேதிப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதை நீண்ட நேரம் பூட்டிய அறைக்குள் பயன்படுத்தும் போது, அது தலைவலி, கண் எரிச்சல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
- கொசுவர்த்தியை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், மூக்கு மற்றும் கண்களில் நீர் ஒழுகுதல், மூச்சிரைப்பு, தொண்டையில் வலி, அலர்ஜி, எரிச்சல், நோய்த்தொற்று போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகை மூலம் நுரையீரலை அழற்சி அடையச் செய்து, வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா நோயை ஏற்படுத்தும். அதை சுவாசிக்கும் சிலருக்கு, ஆஸ்த் மாடிக் அட்டாக் மற்றும் புற்றுநோய் கூட ஏற்படலாம்.
- கொசுக்களை விரட்ட மின்சாரத்தில் இயங்கும் திரவங்களைப் பயன்படுத்தும் போது, ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். இல்லையெனில், அது தும்மல், கண் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.
- கொசுக்களை ஒழிப்பதற்கு, கொசு விரட்டும் க்ரீம்களை தடவிக் கொள்வதும் ஆபத்தானது. ஏனெனில் அதனால் சிலருக்கு தோலில் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படும்.
- பைப்புகள் மூலம் அடிக்கப்படும் கொசு மருந்துகளினால், மூச்சுத்திணறல் மற்றும் சைனஸ் உள்ளவர்களுக்கு இடைவிடாத தும்மல் பிரச்சனையும் ஏற்படுத்தும்.
Loading...