Loading...
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தற்காலிகமாக திறக்கப்பட்ட வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளது.
கேப்பாபுலவு கிராமத்துக்குள் தமது கோவிலை மக்கள் வழிபட சென்றுள்ள நிலையில் மக்களுடன் இணைந்து தென்பகுதி பிக்கு ஒருவரும் தென்பகுதி மக்களும் சென்றிருந்த நிலையில் பிரதான வீதியை மீண்டும் மூடியுள்ளதால் ஒரு குழப்பமான நிலை தோன்றியுள்ளது.
Loading...
இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் வழிபாட்டிற்கு சென்ற மக்கள் மத்தியில் சற்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...