பிரதமரை நேரடியாக தெரிவு செய்யும் யோசனை புதிய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தப்பட்ட வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதனடிப்படையில், புதிய பிரதமரை நேரடியாக தெரிவு செய்தல், பிரதமர் பதவிக்கு ஒருவரது பெயரை முன்மொழிதல் மற்றும் தற்போது அமுலில் உள்ள வெஸ்மினிஸ்டர் முறை சம்பந்தமாகவும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.
திருத்தப்பட்ட புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வரைவு புதிய பந்திகளுடன் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த புதிய பந்திகள் சம்பந்தமாக சகல கட்சிகளும் இணக்கம் தெரிவிக்குமா என்ற நிலையற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கூட்டணி கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் புதிய யோசனைகள் சம்பந்தமாக இதுவரை எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.