பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கு பொலிஸார் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்படி குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினரை விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கூறியுள்ளனர்.
அவ்வாறு வெளியேறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்குமிடத்து தமக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத ஞானசார தேரருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தலைமறைவாகியுள்ள ஞானசாரரை தேடும் பணியில், 4 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.