Loading...
சிவில் சமூகம் நாட்டின் முன்னோக்கிய பயணத்திற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
காலி மாபலகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
Loading...
அன்றாட வாழ்க்கை தொடர்பாக மக்களுக்கு பிரச்சினைகள் இருந்தாலும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் சம்பந்தமாக மக்கள் அவதானிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இனங்களுக்கு இடையில் பேதங்களை ஏற்படுத்தியது சம்பந்தமான பொறுப்பை சிங்கள மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் ஏற்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Loading...