ஒரு சில சூழ்நிலைகள் காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபடும் சிலரின் வாழ்க்கை பற்றி நாம் அறிந்திருப்போம்.
அந்த வகையில், அஸ்வினி எனும் இளம்பெண் தனது வாழ்வில் கடந்து வந்த பாதை இதோ…
”எனக்கு வயது ஐந்து தான் இருக்கும். என் அம்மா ஒரு பாலியல் தொழிலாளி. அவர் சாதாரண விடயத்திற்கு கூட என்னை அடிப்பார். அதனால் நான் அவருக்கு பயந்து ஓடுவேன்.
எனக்கு வயது எட்டு இருக்கும் போது, எனது தாய் என்னை ஒரு NGO-வில் சேர்த்து விட்டார். அங்கு எனது ஆசிரியர் கூட என்னை அடித்துக் கொண்டே இருப்பார். இவ்வாறு பல வருடங்களை கடத்தினேன்.
கிறிஸ்துவ விடுதி ஒன்றில் தங்கிய நான் அங்கு அவர்கள் கூறிய எதையும் பின்பற்றியதே இல்லை. அதனால் பல நாட்கள் அடி, பட்டினி போன்ற நிலையை சந்தித்தேன். அந்த காலத்தில் எனது தாய் இறந்து விட்டார்.
பின் இவ்வாறு ஒரு பத்து வருடத்தைக் கடந்தேன். எனது தோழிகள் சிலர் அந்த விடுதியை விட்டு தப்பி, கிராந்தி (Kranti) எனும் இடத்திற்கு சென்று, என்னையும் அழைத்தனர். அதனால் ஒருநாள் நானும் தப்பி, கிராந்திக்கு சென்றேன்.
கிராந்தியில் சென்றதும் எனது வாழ்க்கை, நல்வாழ்க்கையாக திசை மாறியது. அங்கு கல்வி, கலைகளை கற்றுக் கொடுத்தனர்.
சில நேரங்களில், டாடா மெமோரியல் மருத்துவமனை சென்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அச்சம் இல்லாமல் இருக்க, அவர்கள் முன் நடனம் கூட ஆடுவோம்.
இந்தியா முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக, பயணம் சென்று, தியேட்டர் பயிற்சி, ஹிமாச்சலில் புகைப்பட கலை, டெல்லி தலித் சமுதாயத்தில் வேலை போன்ற பல சூழல்களை கடந்தேன்.
நான் கடந்து வந்த பல படிப்புகள், என்னை சிறந்த கலை தெரபிஸ்ட்டாக மாற்றியது. அதனால் நான் நியூயோர்க் பல்கலைகழகத்தில் விண்ணப்பித்தேன் அங்கே எனக்கு பெரிய ஸ்காலர்ஷிப் கிடைத்தது.
இப்போது எனது வாழ்க்கை, நான் சிறந்த வாழ்க்கையை வாழ எனக்கு இரண்டாம் வாய்ப்பு அளித்துள்ளது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.”