புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு ட்ரயல் அட்பார் தீர்ப்பாய முறையிலான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான தீர்ப்பாயம் யாழ். மேல் நீதிமன்றில் இன்று காலை 09.30 மணியளவில் கூடியது.
இதன் போது சந்தேகநபர்கள் 9 பேரும் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். ஐந்தாவது சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுநாதன் முன்னிலையாகியிருந்தார்.
எனினும், ஏனைய சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் யாரும் தீர்ப்பாயத்தின் முன்னிலையில், ஆஜராகவில்லை.
இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் கலந்தாலோசிப்பதற்கு பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் ரட்ணம் கால அவகாசம் கோரியிருந்தார். இந்நிலையில, 15 நிமிடங்கள் தீர்ப்பாயம் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.