அன்னியச் செலாவணி மோசடி வழக்கில், கேள்விகளை முன்கூட்டியே தரக் கோரி சசிகலா தாக்கல் செய்த மனுவை சென்னை எழும்பூர் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) தள்ளுபடி செய்துள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கின் விசாரணை, எழும்பூர் சென்னை இரண்டாவது பொருளாதார குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையிலேயே,அன்னிய செலாவணி வழக்கில் அமலாக்கத்துறையின் கேள்விகளை முன்கூட்டியே தரக்கோரி சசிகலா தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வெளிநாடுகளில் இருந்து ஜெ.ஜெ., தொலைக்காட்சி நிறுவனத்துக்கு இலத்திரனியல் உபகரணங்களை இறக்குமதி செய்ததில் அன்னிய செலாவணி மோசடி செய்ததாக சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் மீது 1996 -ஆம் ஆண்டில் அமலாகத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.