பரம்பரையாக மரபு ரீதியான தாக்கத்தால் ஓநாய் நோய் குறியுடன் வாழ்ந்து வரும் விசித்திர குடும்பம். இது மனிஷா சாம்பாஜி ராவுத் என்பவற்றின் வாழ்க்கையில் நடந்துக் கொண்டிருக்கும் உண்மை கதை. மனிஷா அனைவரையும் போல பெற்றோர் ஸ்தானத்தை அடைய மிகவும் ஆர்வமாக காத்திருந்த நேரம் அது. மனிஷா மட்டுமல்ல அவரது ஒட்டுமொத்த குடும்பமும் இதற்காக காத்திருந்தது.
ஆனால், வம்சாவளியாக மனிஷாவின் குடும்பத்தை பாதித்து வந்த அந்த ஓநாய் நோய் குறி, மனிஷாவின் குழந்தையையும் விட்டுவைக்கவில்லை. பிறக்கும் போதே, ஓநாய் நோய் குறியுடன் மனிஷாவின் குழந்தை பிறந்தது.
ஓநாய் நோய்க்குறி!
மயிர்மிகைப்பு (Hypertrichosis) என கூறப்படும், தேகம் முழுக்க அளவுக்கு அதிகமாக மயிர் வளரும் இந்த நோயை ஆங்கிலத்தில் “Werewolf” என்றும் குறிப்பிடுவதுண்டு. ஓநாய் போன்ற தோற்ற ஒற்றுமை தென்படுவதால் இப்பெயர் உருவானது
பெயரற்ற குழந்தை! மனிஷாவின் குடும்பத்தில் புது உறுப்பினராக இணைந்துள்ள இவருக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. மரபணு ரீதியாக இந்த பரம்பரை தாக்கம் இவரிடமும் தொற்றிக் கொண்டது.
சகோதரிகள்! மனிஷா மட்டுமல்ல, இவரது சகோதரிகளும் கூட இதே தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்னர். இது தொடர்ச்சியாக இளம் தாயான மனிஷாவின் குழந்தைக்கும் தொற்றியுள்ளது
தீர்வு தான் என்ன?
ஆராய்ச்சியாளர்கள் இன்னும் இந்த நோய்க்குறிக்கு மருந்து கண்டறியப்படவில்லை என கூறுகின்றனர். இந்த சகோதரிகள் ஹேர் ரிமூவல் க்ரீம் பயன்படுத்தி அதிகப்படியான முடியை அகற்றி வருகின்றனர்.
கேலி, கிண்டல்!
“தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த வினோத சரும, தேக மயிர் பிரச்சனையால் சிறு வயதில் பல கேலி, கிண்டல்களுக்கு ஆளாகியுள்ளோம். எங்களை பேய், கரடி, குரங்கு என பலவகையில் மனம் புண்படும்படி பேசியுள்ளனர்.
அந்த வலி இன்றளவும் மனதில் நீங்காவண்ணம் இருக்கும் தருணத்தில், என் குழந்தையும் இதே பிரச்சனையுடன் பிறந்திருப்பது வருத்தத்தை அளித்தாலும். நான் எனது குழந்தையை அதிக அக்கறையுடனும், நேசத்துடன் வளர்ப்பேன் என மனிஷா கூறியுள்ளார்.
எனதே ஒரே ஆசை, எனது குழந்தையும், மற்ற குழந்தைகளை போல சாதரணமாக வாழ வேண்டும், வளர வேண்டும்” என கூறுகிறார் மனிஷா. மேலும் கூறுகையில்… தொடர்ந்து, “எனது மாமியார் எனது குழந்தையை விரும்பவில்லை, அழகாக இல்லை, அசிங்கமாக இருக்கிறான் என கூறுகிரா. மாமியாரே அவனை அசிங்கம், குரங்கு என கூறுவது எனக்கு கோபத்தை வரவழைக்கிறது.
” என மனிஷா மேலும் கூறியுள்ளார். தாய்க்கு தன்பிள்ளை… யாரும் தனது குழந்தையை துன்புறுத்திவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் மனிஷா! காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தானே… அழகு தோற்றத்தில் இல்லை, அகத்தில் இருக்கிறது என்பதை ஊருக்கு புகட்டும்படி மனிஷா தனது குழந்தையை வளர்ப்பார். தாய் அன்பே சிறந்தது.