வடசென்னை படத்தில் சமுத்திரக்கனி மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம் ‘வடசென்னை’. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புக்கள் முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கள் அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ், அமலாபால், அண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தில் சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தனுஷிற்கு இணையாக சமுத்திரக்கனியின் கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதுடன், சமுத்திரக்கனி தற்போது ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்திலும் ரஜினி கூடவே வருவதுபோன்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.