Loading...
வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களிலிருந்து இலங்கை கைத்தொலைபேசிகளுக்கு அனாமேதய தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் இது குறித்து பொது மக்கள் அவதானமாக இருக்கும்படியும் வேண்டப்பட்டுள்ளது.
+17615027697 , +17675021986 , +17675022948 மற்றும் பல +1767502 என ஆரம்பிக்கும் இலக்கங்களிலிருந்தே இவ்வாறு மிஸ்ட் கோல்கள் வருவதாகவும் அதனை மீள அழைக்குமிடத்தும் பெருந்தொகை சேவைக் கட்டணம் அறவிடப்படுவதாகவும் பலர் முறையிட்டுள்ளனர்.
Loading...
இந்நிலையில் தொலைத்தொடர்பு அமைச்சு இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன் ஸ்ரீலங்கா டெலிகொம் இது குறித்து தீவிரமாக ஆராய்வதாகவும் அறியமுடிகிறது.
குறித்த அழைப்புகள் பெரும்பாலும் சில விநாடிகளுக்குள் துண்டிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட சிலர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...